ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்விற்கு அரசு சார்பில் இலவச பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 13, 2019

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்விற்கு அரசு சார்பில் இலவச பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

TN Govt Press Release PDF
இந்திய குடிமைப்பணித் தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:சென்னையில் பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்களுக்கு குடிமைப் பணி தேர்வுகளை எழுத பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சி மையம் வகுப்பறைகள், தங்கும் வசதி, உணவு விடுதி, நூலகம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. மாணவர்கள் கட்டணம் ஏதுமின்றி உணவருந்தவும், தங்கிப் படிக்கவும் இங்கு வசதிகள் இருப்பதோடு தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது. இங்கு பயின்ற பலர் ஆண்டுதோறும் வெற்றி பெற்று அகில இந்தியப் பணி அதிகாரிகளாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.தற்போது முதல்நிலை தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு இம்மையத்தில் தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம். தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் இந்த மையத்தில் முதன்மை தேர்விற்கு பயிற்சி பெற பதிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்படும். இந்த மையத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதும் இளைஞர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதல் நிலை முடிவுகள் வெளியிடப்பட்ட இரண்டு தினங்களுக்குள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம். 225 பேர் தங்கிப் பயில உண்டு, உறைவிட வசதிகள் மையத்தில் உள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews