Breaking

Saturday, July 13, 2019

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: l 181 பணி இடத்துக்கு 9441 பேர் போட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. 181 பணி இடத்துக்கு நடத்தப்படும் இத்தேர்வில் 9441 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை ஆட்சியர் 27 காலியிடம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் 90, வணிக வரித்துறை உதவி ஆணையர்-18. கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர்-13, மாவட்டப் பதிவாளர்-7, ஊரகவளர்ச்சி துறையின் உதவி இயக்குநர்-15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்-8, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட அலுவலர்-3 இடங்கள் என 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 1ம் தேதி அறிவித்தது.
இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 168549 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வுக்கான ரிசல்ட் ஏப்ரல் 3ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9441 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொது அறிவு முதல் தாள் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்காக 95 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வில் 9441 பேர் கலந்து கொண்டனர். முறைகேடுகளை தடுக்க தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் தேர்வு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று பொது அறிவு இரண்டாம் தாள் தேர்வும், நாளை பொது அறிவு 3ம் தாள் தேர்வும் நடைபெறுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog