Breaking

Tuesday, July 16, 2019

பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள்: Click Here For Apply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அருட்செல்வர் நா.மகாலிங்கம் நினைவாக சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான (2019) மண்டல, மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இது குறித்து சென்னை இராமலிங்கர் பணி மன்றச் செயலர் சி.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் நினைவாகவும், சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் 54-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும் கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் எட்டு மண்டலங்களாகப் பிரித்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடத்தப்படவுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் (இளநிலை, முதுநிலை மாணவர்கள் மட்டும்): கட்டுரைப் போட்டி: பார் திருத்த வந்த சீர்திருத்த ஞானி வள்ளலார்' அல்லது தமிழ் மரபில் பூத்த அருள் மலர் இராமலிங்கர்' என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 8 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பேச்சுப் போட்டி: வள்ளுவ மொழியே வள்ளலார் வழி 'அல்லது மனித நேயமே மகாத்மா வாழ்வு'. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் (9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை): இசைப் போட்டி: அருள் விளக்க மாலையில் தெரிவு செய்த பாடல்கள் அல்லது அற்புதம் அற்புதமே', எனக்கும் உனக்கும்', வருவார் அழைத்து வாடி', ஆடிய பாதம்' ஆகிய வள்ளலார் பாடல்களில் ஒன்று (தனி நபராகவோ அல்லது இருவர் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம்)
மனனப் போட்டி: திருவருள் விலாசப் பத்து- ஆறுமுகப் பெருங்கருணை' தொடங்கி 10 பாடல்கள். பேச்சுப்போட்டி: சன்மார்க்கமே உலக சாந்தி மார்க்கம்' அல்லது சத்தியமே காந்தி- காந்தியமே சத்தியம்' மண்டல அளவில் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: திருச்சி (ஆகஸ்ட் 10)- கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி (மக்கள் மன்றம் அருகில்), தில்லை நகர், திருச்சி; சேலம் (ஆக.17)- பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை. நகர், சேலம்; சென்னை (ஆக.18)- சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி (சென்னை சம்ஸ்கிருத கல்லூரி பின்புறம்), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை; மதுரை (ஆக.24)- தியாகராசர் கல்லூரி, காமராஜர் சாலை, மதுரை; திருநெல்வேலி (ஆக.25)- லிட்டில் பிளவர் மாடல் பள்ளி, சேரன்மகாதேவி சாலை, கோடீஸ்வரன் நகர் எதிர்புறம், நெல்லை நகரம்; கோவை (ஆக.31)- டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி, காளப்பட்டி சாலை, நேருநகர், கோவை. மண்டல அளவில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் பத்து இடங்களைப் பெறுபவர்கள் சிறப்புப் பயிலரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். வரும் டிசம்பர் மாதம் பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் இருநாள் பயிலரங்கம் நடைபெறும்.
பரிசு எவ்வளவு?: மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும். அதேபோன்று மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.10,000, ரூ.7,500, ரூ.5,000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க... போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய www.mcet.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இராமலிங்கர் பணி மன்றம், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, உடுமலை சாலை, பொள்ளாச்சி- 642 003' என்ற முகவரிக்கோ அல்லது ramalingar@mcet.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ போட்டி நடைபெறுவதற்கு 5 நாள்கள் முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 94456 37190, 99761 44451 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog