👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்போது நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்தி தேர்வு செய்து வரும் மத்திய அரசு, இனிமேல் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக நெக்ஸ்ட் (National Exit Test) எனப்படும் புதிய தகுதி தேர்வை அமல்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு பதிலாக நெக்ஸ்ட் எனப்படும் தகுதி தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஏழை மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது/
மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது செயல்பட்டு வரும், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்போவதாக மக்களவையில் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு கொண்டு வர உள்ள வரைவு மசோதவில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வானது நாடு முழுவதும் 'நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்' (நெக்ஸ்ட்) என்ற பொது தேர்வு நடத்தப்படும் என்றும், அந்த தேர்வு மதிப்பெண்கள் அடைப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
இந்த தேர்வில் ஏழை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எம்டி மற்றும் எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைமுறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
திருத்தப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் இந்த அம்சம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்குNATIONAL EXIT TEST அதாவது தேசிய நிறைவு நிலைத் தேர்வு என்ற பெயரில் புதிதாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தனியாகநீட் தேர்வு தேவையில்லை என அரசு கருதுகிறது.
மேலும் எம்பிபிஸ் படிப்பு முடித்த பிறகு மருத்துவ பணியை தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்கும் தனித் தேர்வு எழுத தேவையில்லை என்றும்NATIONAL EXIT TEST முடிவுகளே போதுமானது என்றும் மசோதாவில் ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. திருத்தப்பட்ட தேசிய மருத்துவஆணைய மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 80,000 எம்டி,எம்எஸ் படிப்புகளுக்கு 1.5 லட்சம் எம்பிபிஎஸ் மாணவர்கள் விண்ணப்பிப்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U