👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்காக 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் இதுவரை டி.வி.க்கள் வாங்கப்படாததால் சேனல் ஒளிபரப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பத் தளம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8-ஆம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேனலில் 80 சதவீதம் கல்விக்கும், மீதமுள்ள 20 சதவீதம் மாணவர்களின் தனித் திறன்களை வளர்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக 17 வகையான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு இப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், செல்லிடப்பேசி மூலம் சேனலை பார்வையிட கல்வி டிவி என்ற பிரத்யேக செயலியும் வெளியிடப் பட்டுள்ளது.
மறுபுறம் அரசுப் பள்ளிகளுக்கு தொலைக்காட்சி வசதிகளை ஏற்படுத்தி தருவதில் சிக்கல் நீடிப்பதால் கல்வி சேனல் திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியது: கல்வித் தொலைக்காட்சி சேனல் மூலம் கல்வி சார்ந்த திட்டங்கள், விளக்கங்கள், செய்திகள், நீதிக்கதைகள் மாணவர்கள், பெற்றோரிடம் விரைவில் சென்றடையும்.
தமிழகம் முழுவதும் உள்ள 53 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் இன்னும் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லை. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியின் மூலம் டிவி.க்களை வாங்கிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
புதிய தொலைக்காட்சிகளை வாங்க தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் போதுமான நிதி ஆதாரமும் கிடையாது. ஆனால், அவற்றைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என கல்வித் துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் மாதந்தோறும் கேபிள் மற்றும் மின் கட்டணம் செலுத்துவது குறித்த தகவல்களும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.
சிறந்த திட்டத்தை அமல்படுத்த விரும்பும் தமிழக அரசு அதற்கான வசதிகளையும் செய்து தர முன்வர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U