அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை: 3 நாள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 10, 2019

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை: 3 நாள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. மாதத்தில் 3 நாள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் போடப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு சமூக, பொருளாதார சூழ்நிலை ஒரு தடை கல் என்றால், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு முழுமையாக இல்லாததும் ஒரு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் காலதாமதமாக வருவது, வந்துவிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுச் செல்வது, சைடு பிசினஸ் போன்றவற்றில் சிலர் ஈடுபடுவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. குறிப்பாக ஆசிரியர்கள் பள்ளி துவக்க நேரத்தில் வந்து பள்ளி நேரம் முடியும் வரை பணியாற்றினாலே ஓரளவிற்கு மாணவ, மாணவிகளை கண்காணித்து 100 சதவீத தேர்ச்சிக்கு வழிவகுக்க முடியும், என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முதற்கட்டமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறையை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் முதல் முறை அமல்படுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு பயோ மெட்ரிக் இயந்திரத்தை கையாளும் முறை, அதில் வருகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் தலா 2 பயோ மெட்ரிக் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் நேரம் முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கப்படும். தினசரி காலை 10 மணிக்கு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாக வந்துள்ளனர். வராதவர்கள் முறைப்படி விடுமுறை அனுமதி பெற்றுள்ளார்களா போன்ற விவரங்கள் கண்காணிக்கப்படும். மாதத்தில் 3 நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் போடப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் வருகையும் பதிவு: மாணவர்களின் வருகையை ஆன்ட்ராய்டு ஆப் மூலம் பதிவு செய்யும் புதிய தொழில் நுட்பமும் செயல்பாட்டில் வர உள்ளது. அதில் ஒருமுறை மாணவர்களின் போட்டோவை தனியாக படம் பிடித்து, அவர்களின் விவரங்கள் சேமித்து வைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ மாணவியரின் போட்டோக்கள் அதில் சேமிக்கப்படும். அதற்கு பிறகு, தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் குழுவாக படம் பிடிப்பார்கள். வகுப்புக்கு வந்துள்ள மாணவர்கள், வராதவர்கள் குறித்த விவரங்களை செல்போனில் உள்ள செயலி காட்டிக் கொடுத்துவிடும். வருகை விவரங்கள் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரி மற்றும் பெற்றோருக்கு செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் சென்றுவிடும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews