👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களின்கீழ் (டாப்செட்கோ) கடன் வழங்கி வருகிறது.
அந்த கடன் பெறுவதற்கான வழிமுறைகளாக நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், கடன் வழங்கும் முறை, கடன் தொகைக்கான பிணையம், கடன் திட்டங்களின் விவரங்கள் சில கடன் திட்டங்கள் பற்றி இனி பார்ப்போம்…
3) ஆடவருக்கான சிறு கடன் திட்டம் சிறு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் சுயஉதவிக் குழுவின் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 2 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
அதிகபட்ச கடன்தொகை : ரூ.60,000
*பயனாளியின் பங்கு:5%
*தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்
*பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு :5%
*தேசிய கழகத்தின் பங்கு:90%
*ஆண்டு வட்டி வீதம்:5%
*திரும்ப செலுத்தும் காலம்:4 ஆண்டுகள்
4) கறவை மாட்டுக்குக் கடன் :பொதுக் காலக்கடன் திட்ட விதிமுறைகளின்படி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வரையிலான திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க பரிந்துரை செய்யும். இத்திட்டத்தின்கீழ் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வீதம் கடன் வழங்கப்படும்.5) புதிய கடன் திட்டங்கள் : தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் கீழ்க்கண்ட புதிய கடன் திட்டங்கள், 2/12-13 முதல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
அ. இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு, சுயதொழில் தொடங்க கடன் திட்டம் (Saksham)
அதிகபட்ச கடன் தொகை: ரூ.10 லட்சம்
*பயனாளியின் பங்கு :5%
*தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு :10%
*தேசிய கழகத்தின் பங்கு:85%
*ஆண்டு வட்டி வீதம்
*ரூ.5 லட்சம் வரை: 6%
*ரூ.5 லட்சத்திற்கு மேல் : 8%
*திரும்ப செலுத்தும் காலம்: 10 ஆண்டுகள்
ஆ. மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்க கடன் திட்டம் (Shilp Sampada)
*பயனாளியின் பங்கு:5%
*தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு :10%
*தேசிய கழகத்தின் பங்கு:85%
*ஆண்டு வட்டி வீதம்
*ரூ.50 லட்சம் வரை:6%
* ரூ.5 லட்சத்திற்கு மேல் :8%
*திரும்ப செலுத்தும் காலம் :10 ஆண்டுகள்
இ. சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறு கடன் திட்டம்
(Krishi Sampada)அதிகபட்ச கடன் தொகை : ரூ.50,000
*இக்கழகத்தின் பங்கு : 5%
*தேசிய கழகத்தின் பங்கு : 95%
*ஆண்டு வட்டி வீதம் : 4%
*திரும்ப செலுத்தும் காலம்: 4 ஆண்டுகள்
ஈ. சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் அமைப்பதற்காக, அதிகபட்சம் ரூபாய் ஒரு லட்சம் வரை மானியத்துடன்கூடிய கடன் வழங்கும் திட்டம் 2007-08ம் ஆண்டு முதல் இக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000 வரை அரசு வழங்கும்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்