குஜராத் ஆசிரியைக்கு உலக ஆசிரியர் விருது!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

குஜராத் ஆசிரியைக்கு உலக ஆசிரியர் விருது!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
உலக ஆசிரியர் விருது பெறுவோருக்கான 10 பேர் கொண்ட பட்டியலில் குஜராத் ஆசிரியை ஸ்வரூப் ராவல் இடம் பெற்றுள்ளார். ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் உலக ஆசிரியர் விருது, கல்வித்துறையில் மாணவர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பயனளிக்கும் விதமாக சேவையாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்காக 179 நாடுகளை சேர்ந்த ஆயிரம் பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
இவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் 10 பேர் கொண்ட பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஆசிரியை ஸ்வரூப் ராவல் பெயர் இடம்ெபற்றுள்ளது. அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் உலக கல்வி மற்றும் திறன் அமைப்பு விழாவில் உலக ஆசிரியர் விருது வழங்கப்படும். விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்வரூப் ராவல், முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவரது கணவர் பரேஷ் ராவல், நடிகராவர். ஸ்வரூப் குஜராத்தில் உள்ள லாவத் ஆரம்ப பள்ளியில் வாழ்வியல் திறன்களை கற்பிக்கும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews