👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648

கல்விக்கட்டணம் செலுத்தாததால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்த அஜீத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கிறேன். எஸ்சி - எஸ்டி மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் மற்றும் பிற பராமரிப்புக்கான பணம் உள்ளிட்டவை கல்வி உதவித்தொகையில் வழங்கப்படும். கடந்தாண்டு தேர்வு எழுதியவர்களில் எனக்கும் மற்றும் சிலருக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. நாங்கள் கல்விக்கட்டணம் செலுத்தாததால் எங்கள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை வந்ததும் அதிலிருந்து தான் கட்டணம் செலுத்துவோம். ஆண்டின் துவக்கத்தில் கிடைக்கும் கல்வி உதவித்தொகையை வழங்காததால், எங்களால் கல்விக்கட்டணம் செலுத்த முடியவில்லை. இதற்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. எனவே, கல்வி உதவித்தொகையை வழங்கவும், எங்களது தேர்வு முடிவுகளை வௌியிடவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோரின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை பிப். 27க்கு தள்ளி வைத்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்