👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
சென்னை: 'சத்துணவு மையங்களில், மாணவர்கள் கை கழுவ, 'சோப் அல்லது ஹேண்ட் வாஷ்' வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்., - எம்.எல்.ஏ., கணேஷ் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:காங்., - கணேஷ்: ஊட்டி தொகுதி, எல்லநள்ளி பகுதியில் உள்ள, உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, அரசு ஆவன செய்யுமா?அமைச்சர் செங்கோட்டையன்: விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால், இந்த ஆண்டு இயலாது.கணேஷ்: அங்குள்ள மாணவர்கள், மேல்நிலைக்கல்வி கற்க, 5 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டி உள்ளது.
மாணவர்கள் சிரமத்தை குறைக்க, அந்தப் பள்ளியை, தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: மலைப்பகுதி என்பதால், அரசு பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கும்.கணேஷ்: உணவு உண்பதற்கு முன், கை கழுவாததால், 80 சதவீத நோய்கள் வருகின்றன. எனவே, சத்துணவு மையங்களில், மாணவர்கள் கை கழுவுவதற்கு வசதியாக, சோப் அல்லது ஹேண்ட் வாஷ் வழங்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: சத்துணவு மையங்களை, சுகாதாரமாக பராமரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.தி.மு.க., - ஆண்டி அம்பலம்: பெரும்பாலான பள்ளிகளில், சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், கட்டடம் கட்டும்போது, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது, சுற்றுச்சுவர், கழிப்பிடம் கட்ட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, திருவாலங்காடு பள்ளி ஆகியவற்றுக்கு, கட்டட வசதி செய்து தர வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: 'நபார்டு' வங்கி திட்டத்தில், கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்