Breaking

Saturday, June 16, 2018

ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்தக் கோரி காஷ்மீரில் போராட்டம்: ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பு


காஷ்மீரில் ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துதல், ஊதிய உயர்வு நிலுவையை ஒரே தவணையில் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை முதலமைச்சர் மெகபூபா முப்தி அழைத்துப் பேசினார். அப்போது ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒரு மாதத்தில் நிறைவேற்றுவதாக முதலமைச்சர் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog