தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளி கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 24, 2018

Comments:0

தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளி கல்வித் துறை



முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தற்போது, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகிய பின், பிளஸ் 2 முடித்து, வெளியே வருவோருக்கு, வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.kaninikkalvi.blogspot.com  இவ்வாறு அவர் பேசினார்.

பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''பள்ளிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, நடப்பாண்டு, 1,800 கோடி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுஉள்ளது. ''கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு, தேவையான புதிய கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ஜூலை இறுதிக்குள் கட்டப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews