Breaking

Saturday, May 19, 2018

சீர்மிகு சட்டப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை பெருங்குடியில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று  சட்டப் பல்கலைகழக பதிவாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:  சென்னை பெருங்குடியில் உள்ள  டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு உதவிப்  பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மே 18ம் தேதி முதல் 28ம் தேதி www.tndalu.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  விண்ணப்பிக்கலாம்.  சட்டம், வரலாறு, ெபாருளாதாரம், வணிக மேலாண்மை, ஆங்கிலம், அரசியல் அறிவியல், கம்யூட்டர் அப்ளிகேசன் பிரிவுகளை  சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  ஆசிரியர் பணிக்கு தேவையான குறிப்பிட்ட பாடப்பிரிவில், முதுகலை பட்டமும், நெட்/ஸ்லெட்/பி.எச்டி பட்டம்  பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டிமான்ட் டிராப்டாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்பிக்க மே 28ம் தேதி  கடைசி நாளாகும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog