பி.இ. படிப்பு : முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 19, 2018

Comments:0

பி.இ. படிப்பு : முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் வெளியீடு


பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2018) வெளியிடப்பட்டுள்ள இந்த விவரங்களில் 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.  இந்த விவரங்களின் அடிப்படையில், தங்களுக்கு எந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மாணவர்கள் முன்கூட்டியே கணித்துக் கொள் ளலாம் மேலும், ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் முன்னதாக இந்த கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 5 முதல் 10 பொறியியல் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் குறித்து வைத்துக் கொள்வது வசதியாக இருக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் ஏற்கெனவே கூறியுள்ளனர். அதாவது, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட மூன்று துறைகள் மற்றும் பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கான கட்-ஆப் குறைய வாய்ப்பு இல்லை எனவும் இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2 முதல் 3 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews