பொறியியல் படிப்புக்கான சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்படுவதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் கலந்தாய்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் முறை வெளிப்படைத் தன்மை உடையதாகவே உள்ளது. ஆன்லைன் முறை கிராமப்புற மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் செயல்படுத்தப்படும். நேரடி விண்ணப்ப நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. டி.டி.யாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை விசாரணை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.