Tnpsc கேள்விதாள் எப்படி தயாரிக்கபடுகிறது? அதில் எவ்வாறு முறைகேடு நடைபெறுகிறது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 17, 2018

Comments:0

Tnpsc கேள்விதாள் எப்படி தயாரிக்கபடுகிறது? அதில் எவ்வாறு முறைகேடு நடைபெறுகிறது?


கேள்வித்தாள்களை 50 பேராசிரியர்கள் தயாரித்துள்ளனர். அதில், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 45க்கும் மேற்பட்டவர்கள் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுத்தனர். இவர்கள் அனைவரையும் பரிந்துரை செய்தது கல்லூரியின் முதல்வர் பிரமானந்தபெருமாள். ஒவ்வொரு பேராசிரியரும் 3 கேள்விகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். அதன்படி இவர்கள் 45 பேரும் என்ன கேள்விகள் தயாரித்துக் கொடுத்தோம் என்பதை கல்லூரியின் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் கல்லூரியின் முதல்வர், அவ்வளவு கேள்விகளையும் சாம் ராஜேஸ்வரனுக்கு கொடுத்துள்ளார். சாம் ராஜேஸ்வரன், அந்த கேள்விகளை தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன் 2 முறை தனது பயிற்சி மையத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்த கேள்விகள் மூலம் மட்டுமே குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை பெற முடியும் என்று தெரியவந்தது. இதனால் கேள்விகளை தயாரித்த கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதல்வருடன் அடிக்கடி சாம் ராஜேஸ்வரன் பேசி வந்துள்ளார். செல்போனில் அவர்கள் தொடர்ந்து பேசி வந்ததற்கான ஆவணங்களை போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர். இந்த உதவிக்குப் பலனாக பேராசிரியர்களுக்கு பெரிய அளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிமுதல்வரின் உறவினர் ஒருவரை இந்த பயிற்சி மையம் மூலம் தேர்வு பெற ஏற்பாடு செய்துள்ளனர். அதன்பின் 2வது கட்டமாக தேர்வு எழுதும் மையத்தில் முறைகேடு செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு கேள்வித்தாள்கள் அனைத்தும் தேர்வு நடைபெறும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அனைத்து கேள்வித்தாள்களும் 7 மணிக்குள் ெகாண்டு செல்ல வேண்டும். தேர்வு மையத்தில் 8 மணிக்கு தேர்வு தொடங்கும். இந்த இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள் கவர்களை பிரித்து கேள்விகளை வாங்கி, தனது மையத்தில் படிப்பவர்களுக்கு சாம் ராஜேஸ்வரன் அனுப்பியுள்ளார். அதிலும் பெருமளவில் மார்க்குகள் கிடைக்கும். இந்த இரு கட்ட தேர்வுகளையும் அதிகாரிகள் மூலம் சாம் ராஜேஸ்வரனே தேர்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து 3வது கட்டமாக நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த நேர்முகத் தேர்வின் தலைவராக இருப்பவர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர். அதைத் தவிர ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் உள்ள தலா ஒரு அதிகாரி, ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர் என மொத்தம் 5 பேர் இருப்பார்கள். இவர்கள் கேள்விகளை கேட்பார்கள். அதில், சாம் ராஜேஸ்வரன் நடத்தும் மனிதநேயம்-அப்பல்லோ பயிற்சி மையத்துடன் இணைந்த ஒரு அரசியல் பிரமுகர் இந்த 3ம் கட்ட தேர்வுக்கு உதவி செய்வார். அவர், பல ஆண்டுகாலம் அரசியலில் இருப்பதால், டிஎன்பிஎஸ்சியில் அவருக்கு தெரிந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள் மூலம் 3ம் கட்ட தேர்வில் மதிப்பெண் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் குறிப்பாக நேர்முகத்தேர்வு நடைபெறும் அன்று ஒரு குறிப்பிட்ட கலரில் ஆண்கள், பெண்கள் உடையணிந்து செல்ல வேண்டும் என்பது ரகசிய குறியீடாக இருக்கும். 2016ம் ஆண்டு நீல நிறத்தில், உடையணிந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி 62 பேரும், நீல நிற உடையணிந்து சென்று வந்தனர். அப்போது நேர்முகத்தேர்வை நடத்துகிறவர்கள், நீல நிற உடையணிந்து வருகிறவர்களுக்கு மார்க்குகளை வாரி வழங்குவார்கள். இந்த 3 கட்டத்தில் மார்க்குகள் அதிக அளவில் கிடைத்து விடும். அதையும் மீறி சிலர் குறைவாக மதிப்பெண் எடுத்தால், 4வது கட்டத்தை தேர்ந்தெடுப்பார்கள். அதில் மனித நேயம்-அப்பல்லோ பயிற்சி மையத்தில் படிப்பவர்கள் மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தமிழகம் முழுவதும் தற்போது தேர்வு எழுதுகிறவர்கள் பால் பாய்ன்ட் பேனா மூலம்தான் எழுதுகின்றனர். இதனால் மை பேனாவை பயன்படுத்தினால் அந்த கேள்வித்தாள் மனிதநேயம்-அப்பல்லோ பயிற்சி மையத்தில் படிப்பவர்கள் என்று அர்த்தம். அந்த விடைத்தாள்களுக்கு திருத்துகிறவர்கள் அதிக மதிப்பெண்களை போடுவார்கள். இவ்வாறு 4 கட்டமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் 62 பேர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, தற்போது டிஎஸ்பிக்களாகவும், டிஆர்ஓக்களாகவும் பணியாற்றி வருகின்றனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள  Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews