பெரியார் பல்கலை. விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 17, 2018

Comments:0

பெரியார் பல்கலை. விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிப்பு


பெரியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில்வதற்கு விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரியார் பல்கலைக்கழகத்தில் 27 துறைகளில் கற்பிக்கப்படும் 28 முதுநிலைப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் பணி கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணாக்கர்கள் நலன் கருதி முதுநிலையில் சேர விரும்பும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி மே 18-ஆம் தேதியில் இருந்து மே 25-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் துறைகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் என துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். முதுநிலைப் பாடங்கள் குறித்தும், ஏனைய விவரங்கள் குறித்தும் அறிய பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews