மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக பெ.சண்முகம் வலியுறுத்தல் - P. Shanmugam urges Union Education Minister Dharmendra Pradhan to resign
சென்னை: ‘கல்வி அமைச்சகம் துவங்கி அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயலுக்கு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்வு இருண்டுவிட்டது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் நீட் தேர்வு கேள்வித்தாள் அவுட், தேர்வு ரத்து. கியூட் தேர்வு முறையாக நடக்கவில்லை, தேர்வு ரத்து. சிபிஎஸ்இ தேர்விலும் குளறுபடி, விசாரணை நடக்கிறது.
கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நேர்மையாகவும் தேர்வு நடத்துவது. ஆனால், தொடர்ந்து தேர்வு நடத்துவதிலேயே தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.
கல்வி அமைச்சகம் துவங்கி அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயலுக்கு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்வு இருண்டு விட்டது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.