தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: மண்பாண்டம் தயாரித்தல், காலனிகள் தயாரித்தல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட 35 வகையான தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் மற்றும் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு ரூ.6.25 கோடி நிலுவை ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை
திமுக அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை 56 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும் 447 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 786 மாற்றுத்திறனாளிகள் உட்பட 70, 120 நபர்களுக்கு தனியார்த் துறை நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை முதல்வர் அறிவுரைப்படி விரைவில் ஒரு லட்சமாக உயர்த்துவதற்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலும், கள்ளக்குறிச்சியிலும், மதுரையிலும், பெரம்பலூரிலும், சென்னையில் பெரம்பூரிலும் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.