2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 04, 2023

Comments:0

2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு

2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு

பள்ளிக் கல்வி 1990 1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007. 2011-2012. 2014-2015 மற்றும் 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு ஊதியக்கொடுப்பாணை (Pay Authoritation) வழங்குதல் சார்பு.

பார்வை:

1அரசாணை (நிலை) எண் 282 பள்ளிக் கல்வித் (மேநிக-2) துறை, நாள் 03.11.2009.

2அரசாணை (நிலை) எண்.120, பள்ளிக் கல்வித் (மே.நி.க.2) துறை, நாள் 08.08.2011.

3.அரசாணை (நிலை) எண்.148 பள்ளிக் கல்வித் (மு.க.2 (2) துறை, நாள் 22.09.2014.

4. அரசாணை (நிலை) எண்.98, பள்ளிக் கல்வித் (பக2(2)) துறை, நாள் 14.05.2018..

5. அரசாணை (நிலை) எண்.111, பள்ளிக் கல்வித் (பக2:2) துறை, நாள் 04.06.2018.

6. அரசாணை (நிலை) எண்.115, பள்ளிக் கல்வித்(அகஇ(1) துறை, நாள் 07.06.2018,

7. அரசாணை (நிலை) எண்.165, பள்ளிக் கல்வித் (பக2(2) துறை, நாள் 07.08.2018.

8. அரசாணை (நிலை) எண்.166, பள்ளிக் கல்வித் (பக2(2)) துறை, நாள்.07.08.2018

9. அரசாணை (1டி) எண்.49, பள்ளிக் கல்வித்(ப.க.5(1)) துறை, நாள். 09.02.2019,

10. அரசாணை (1டி) எண்.354, பள்ளிக் கல்வித் (ப.க.5(1) துறை, நாள்.06.09.2019.

11.அரசாணை (டி) எண்.82, பள்ளிக் கல்வித் (ப.க.5(1) துறை. நாள்.07.03.2019.

12. அரசாணை (1டி) எண்.21, பள்ளிக் கல்வித் (பக 5(1) துறை, நாள் 10.012020.

13. அரசாணை (1டி) எண்.25, பள்ளிக் கல்வித் (பக5(1) துறை, நாள் 21.01.2020.

14.பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண்.000503/ எல்/இ3/2022, நாள் 06.02.2023 பார்வை 1-இல் காணும் அரசாணையின்படி 1990 - 1991 மற்றும் 2002 2003ஆம் ஆண்டு முதல் 2006 -2007 ஆம் ஆண்டு வரை அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 45 பள்ளிகளுக்கு 45 முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) மற்றும் 45 முதுகலை ஆசிரியர் பொருளியல்) ஆக மொத்தம் 90 பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2. பார்வை 2-இல் காணும் அரசாணையின்படி 2011 2012 ஆம் கல்வியாண்டில் 100 அரசு / மாநகராட்சி/ நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தியும், நிலை உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு. பொருளியல், மற்றும் வணிகவியல் என 9 பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டது.

3. பார்வை 3.இல் காணும் அரசாணையின்படி 2014-2015ஆம் கல்வியாண்டில் 100 அரசு / மாநகராட்சி/ நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தியும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம். இயற்பியல் வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் என 9 பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டது. 4. பார்வை 4 முதல் 6 வரை உள்ள அரசாணைகளின்படி, 2018. 2019ஆம் கல்வியாண்டில் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணையிடப்பட்டது. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 5 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 5 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்தி 5 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 5 மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் 6 முதுகலை ஆசிரியர் பணியிடம் வீதம் 30 பணியிடங்களுக்கு உபரியாக உள்ள பணியிடங்களை பணிநிரவல் மூலம் நிரப்பிக் கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.

5. பார்வை 7-இல் காணும் அரசாணையில், 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது மற்றும் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் தோற்றுவித்தும், அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் ஒன்று வீதம் 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தும் ஆணை வெளியிடப்பட்டது.

6. பார்வை 8-இல் காணும் அரசாணையின்படி, 2018-2019ஆம் கல்வியாண்டில் 95 அரசு நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 95 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 95 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தியும் மற்றும் 95 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் (95x6=570) 570 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டது.

7. பார்வை 9 முதல் 13 வரை உள்ள அரசாணைகளின்படி, 200 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2460 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 8. பார்வை ஒன்று முதல் எட்டு வரை உள்ள அரசாணைகளின்படி ஒப்பளிப்பு செய்யப்பட்ட 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட தொடர் நீட்டிப்பு 31.122021 அன்று உடன் முடிவடைந்த நிலையில், இப்பணியிடங்களுக்கு 01.01.2022 முதல் 31:12.2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும், தற்பொழுது இப்பணியிடங்களுக்கு பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

9. மேற்குறிப்பிட்டுள்ள தற்காலிகப் பணியிடங்களுக்கு 01.01.2022 முதல் 31:12:2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், பார்வை ஒன்று முதல் எட்டு அரசாணைகளின்படி ஒப்பளிப்பு செய்யப்பட்ட 2760 வரை உள்ள தற்காலிகப் பணியிடங்களுக்கு, பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான பிப்ரவரி-2023 ஆம் மாதத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

10. இக்கடிதம் மின் அலுவலகக் கோ.எண்.793/நிதி(கல்வி-11)/2023, நாள் 01.03.2023 இல் பெற்ற ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews