👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா? அப்படின்னா முதல்ல இதை செய்யுங்க. உங்களது ஆதார் எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்டுடன் இணையுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.
இவ்வாறு ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது, வாடிக்கையாளர்கள், ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் பதிவு செய்ய முடியும் என்றும், இதே தங்கள் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்கள் வெறும் 6 டிக்கெட்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.
சரி எப்படி ஆதார் எண்ணை எப்படி ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைப்பது என்று கேட்கிறீர்களா?
ஐ.ஆர்.சி.டி.சி பிரத்யோக இணைய தளத்திற்கு சென்று, உங்களது ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்ட் தளத்திற்கு செல்லுங்கள், அங்கு மை அக்கவுண்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்து, அங்குள்ள லிங்க் யுவர் ஆதார் என்ற லிங்கினை கிளிக் செய்தால் அது நேரிடையாக உங்களது கே.ஒய்.சி பக்கத்திற்கு செல்லும்.
அங்கு உங்களது பெயரை ஆதாரில் உள்ளது போல பதிவு செய்ய வேண்டும். மேலும் உங்களது ஆதார் எண்ணை கொடுத்து, இன்னும் சில விபரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அங்குள்ள செக்பாக்ஸை தேர்தெடுத்து விட்டு, பின்பு ஓ.டி.பி பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். இந்த ஓடிபி எண்ணை கொடுத்து சரி பார்த்த பின்பு, பிறகு அப்டேட் செய்யவும். இதன் பின்னர் உங்கள் ஆதார் எண் ஐ.ஆர்.சி.டி.சி தளத்துடன் இணைக்கப்படும்.
மத்திய அரசு தொடர்ந்து பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து ஆதார் எண்ணை பிரதானமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. அதிலும் வங்கிக் கணக்கு, வருமான வரி கணக்கு, ஆதார் பான் இணைப்பு, இது தவிர முக்கிய முகவரி அடையாள சான்றிதலாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் படி ஐ.ஆர்.சி.டி.சியும் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது. இதன் மூலம் மூலம் தொடர்ச்சியாக இரயிலில் செல்பவர்கள் பயன் அடையாளம் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.
போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் ரயில் பயனர்களுக்கு, இது மிக பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.