Breaking

Saturday, June 13, 2026

NEET தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு



ஜூன் 21ல் நடக்கும் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

NEET தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு Allocation of additional time for NEET exam – Official announcement released.

வரும் 21ம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் (யுஜி) தேர்வில், தேர்வர்களுக்கு உகந்த சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

இந்த சூழலில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில் குளறுபடி நடந்ததை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பதில் 3 மணி 15 நிமிடங்கள் என அறிவித்துள்ளது தேசிய தேர்வு முகமை நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களின் நேரம் வீணாகக் கூடாது என்பதற்காக நடவடிக்கை; ஜூன் 21ல் நடக்கும் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog