Breaking

Wednesday, June 04, 2025

கோச்சிங் சென்டர்களை தடை செய்ய பரிந்துரை



கோச்சிங் சென்டர்களை தடை செய்ய பரிந்துரை

பள்ளிகளில் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்யவோ அல்லது வரைமுறைப்படுத்தவோ குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு இன்று தமிழக அரசிடம் அளித்த அறிக்கையில், இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த இதுபோன்ற பயிற்சி மையங்கள் செயல்படுவதாகவும் அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று சமர்ப்பித்த அறிக்கையில், பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளில் இவ்வாறு நடத்தப்படும் பயிற்சி மையங்கள், பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமலேயே, அல்லது பாடங்களை நடத்தாமலேயே, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு மட்டும் தயார் செய்வதாக் கல்விக் கொள்கை வரையறைக் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog