பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே 5 முதல் தொடங்க வாய்ப்பு
தமிழகத்தில் பிஇ உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாண வர்களுக்கான இணையவழி விண் ணப்பப் பதிவு மே 5 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. இவற்றில் இள நிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் (அரசு ஒதுக்கீடு) இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற் கான சேர்க்கை கலந்தாய்வு 2018-ஆம் ஆண்டு முதல் இணையவழியாக நடத்தப்படுகிறது. இந்தகலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்: அதன்படி நிகழாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங் கவுள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.
இது குறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொறி யியல் படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 5 முதல் தொடங்க திட்டமிடப்பட் டுள்ளது. இதையடுத்து ஜூன் முதல் வாரம்வரை விண்ணப்பிக்ககாலஅவ
காசம் வழங்கப்படும்.
தொடர்ந்து ஜூலை 2-ஆவது வாரத்தில் தரவரி சைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் கலந்தாய்வை ஆகஸ்ட் 2 முதல் நடத்துவதற்கு முடிவு செய் யப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர் தல் ஆணையத்தின் அனுமதிக்காக தற்போது சமர்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அறி விப்பு வெளியாகும் என்றனர்.
தேர்தல் ஆணையத்திடம்.... இதற்கிடையே மாநில பாடத்திட்டத் தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி னர். இவர்களின் விடைத்தாள் திருத் தும் பணிகள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து பொதுத் தேர்வு முடிவு கள் மே 6-ஆம் தேதி வெளியிடப்பட வுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளன. இதனால் பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் முன்அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரி கள் தெரிவித்தனர்.
Search This Blog
Friday, May 03, 2024
Comments:0
Home
Admission
ENGINEERING
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை மறுதினம் தொடங்கவுள்ளதாக தகவல்
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை மறுதினம் தொடங்கவுள்ளதாக தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.