G.O - 243 Thank you Minister for clarifying his position in the conference! Now the decision is in the hands of TETOJAC / JACTTO-GEO! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 05, 2024

Comments:0

G.O - 243 Thank you Minister for clarifying his position in the conference! Now the decision is in the hands of TETOJAC / JACTTO-GEO!



G.O - 243 Thank you Minister for clarifying his position in the conference! Now the decision is in the hands of TETOJAC / JACTTO-GEO! - 243 நன்றி மாநாட்டில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர்! இனி முடிவு TETOJAC / JACTTO-GEO கரங்களில் மட்டுமே!

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

👉🏼 நன்றி தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ யாவருக்குமே ஜனநாயகப்பூர்வ உரிமையுண்டு.

👉🏼 மாநாட்டு பேட்ஜ்ஜை இங்கே என் நெஞ்சருகே குத்தினர். சிலரோ இன்று தங்கள் வார்த்தைகளால் என் நெஞ்சில் குத்தி வருகின்றனர்.

👉🏼 பெண்ணாசிரியர்களுக்குப் பிரச்சினை என திசை திருப்புகின்றனர்.

👉🏼 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படவே இல்லை. PHM -> BT -> MHM -> BEO என அவர்களும் பதவி உயர்வு பெறலாம்.

👉🏼 யாருடைய தூண்டுதலிலோ / உணர்விலோ தான் இதை எதிர்த்து போராடுகின்றனர்.

👉🏼 நான் தந்தையைப் போல இருக்கிறேன். எனது கதவுகள் திறந்தே இருக்கிறது. பிரச்சினைகளை என்னிடம் நேரிலேயே தெரிவிக்கலாம்.

- திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

(மாண்புமிகு ப.க.து அமைச்சர்)

ஆக. . . மாண்புமிகு அமைச்சர் அவர்கள் TAMS சொல்வதை மட்டுமே சரியென்று நம்பிக் கொண்டு இருக்கிறார். அது மட்டுமே ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித்துறை என்றும் நம்புகிறார். பிரச்சினையின் உண்மையைப் புரிந்துகொள்ளாது உள்ளார் என்பதை அவர்கூறிய மேற்கண்ட சொற்களின் படியே நாம் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. யாருக்குமே கெடுதலில்லை என்று அவர் கூறினாலும். . . . இதன் பின்விளைவுகளைத் திமுக உறுதியாக அறுவடை செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவருக்கும் கட்சிக்கும் உண்மையாக இருப்போர் எவரேனும் இனியேனும் அவரிடம் எடுத்துக்கூற வேண்டும்.

முன்னதாக ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றித்தராத சூழலில், தந்தையைப் போல உள்ளவர் இந்தச் சிக்கலிலாவது உண்மையான பிரச்சினை என்ன என்பதை அறிந்து கொள்ள TETOJACற்கு அழைப்பு விடுத்தாரா என்பது தெரியவில்லை. பிள்ளைக்கு பிரச்சினைனா தந்தைதானே முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். அவ்வாறு ஏதும் நிகழவில்லையெனில், இது தந்தையின் குணமாக அல்லாது, பெரியண்ணன் போக்காகத்தான் உணர வேண்டியுள்ளது. TETOJAC இந்தச் சிக்கல்கள் குறித்து தன்னிடம் பேச வரவேயில்லை என்றுதான் கூறுகிறார். TETOJAC சிக்கல்களை அமைச்சரிடம் விளக்கிக் கூறியதா? என்பதை TETOJAC தான் தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சரிடம் இது குறித்து தெளிவுபடுத்தியது உண்மையெனில், இதற்கான மறுவினையையாவது சுயமரியாதையோடே TETOJAC வெளிப்படுத்த வேண்டும். இனியும் தேன் தடவிய போராட்ட முறைகளையும் பேச்சுவார்த்தைகளையும் செய்து கொண்டே இருந்தால், துளியும் பயனில்லை என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். TETOJAC / JACTTO-GEO இரு கூட்டமைப்புகளும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாக்குகள் திமுகவிற்கு எதிராகப் போய்விடக்கூடாது என்ற காரணத்திற்காகக் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றுக்கும் உதவாத வெற்றுப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளபோதும். . . . யாருடைய தூண்டுதலிலோதான் போராடுகின்றனர் என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிடுகிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ தொடக்கக்கல்வித் துறை சங்கமான தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இன்றும் TETOJAC & JACTTO-GEO களத்தில் உள்ளதே! அதை யார் தூண்டியதாக அமைச்சர் அவர்கள் கருகின்றாரோ தெரியவில்லை.

தற்போதைய சூழலில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் வாக்குகளில் 90% திமுகவிற்கு எதிரான மனநிலையில் மட்டுமே உள்ளது.

TETOJAC / JACTTO-GEO பொத்திப் பொத்தி பாதுகாத்த உறுப்பினர்களும் & ஆட்சியாளர்களும் TETOJAC / JACTTO-GEOவின் எண்ணங்களுக்கு எதிராக மட்டுமே உள்ளனர் எனும் சூழலில். . . .

இனியும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக இல்லாது, உறுப்பினர்களின் நலனிற்காக எவ்விதச் சமரசமுமின்றி கோரிக்கை நிறைவேற்றத்திற்காகச் சமர் புரியத் தயாராக வேண்டும். அப்ப இதுவரை சமரசத்தோடேவா சமர்புரிந்தோம் என்றால். . . . உறுப்பினர்கள் ஒவ்வொரு முறையும் உண்மையாகத்தான் களத்திற்கு வருகின்றனர். ஆனால், களங்களோ காலத்தைக் கடத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.

இல்லையெனில் இழந்ததெதையும் மீட்காவிடினும், இருப்பதையாவது இழக்காது இருந்திருப்போமே! இந்த 3 ஆண்டுகளில் இழந்தவை அதிகம்.

மாண்புமிகு அமைச்சர் குறிப்பிட்டது போல நன்றி கூறவோ / அதை எதிர்க்கவோ யாவருக்கும் உரிமை உண்டு என்பதை மட்டுமே அவரது ஒட்டுமொத்த மாநாட்டுப் பேச்சில் ஏற்கிறேன். மேலும் TAMSஐ விட TETOJAC தான் வலிமை மிக்கது என்பதையும், 243ன் உண்மையான கோர முகத்தையும் அவருக்கு முன்பே முழுமையாக உணர்த்தியிருந்தால் இன்றைய கூட்டத்திலேயே அவர் கலந்திருக்க மாட்டார்.

எனினும், எல்லாம் நன்மைக்கே! அமைச்சர் அவர்கள் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்.

இனி, TETOJAC / JACTTO-GEO கூட்டமைப்புகள் தான் முடிவு செய்ய வேண்டும். . . . களம் யாருடைய தூண்டுதலின் பேரில்தான் உண்டானாதா? / ஆட்சியாளர்கள் நிகழ்த்தியுள்ள கோரமான உரிமைப் பறிப்புகளால் உண்டானாதா? என்பதை.

ஆனால், கட்டுச்சோற்றுக்குள் எலிகளைக் கட்டிவைத்துக் கொண்டு எதுவும் சாத்தியமே இல்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews