This image features a Tamil newspaper article regarding a school celebration alongside advertisements for job openings and a hearing aid center in Nagercoil.
A government primary school in Malavilai celebrated its annual function, where alumni gifted gold rings to 24 students.
The event included the inauguration of a new children's park funded by a local doctor.
மலவிளை அரசு பள்ளியில் முப்பெரும் விழா 24 மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
நாகர்கோவில், மார்ச் 15-மலவிளை
தொடக்கப்பள்ளியில் நடை பெற்ற முப்பெரும் விழா வில் 23 மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் தங்க மோதிரம் வழங்கினர். அயக்கோடு பஞ்சாயத் இற்கு உட்பட்ட மலவிளை தொடக்கப்பள்ளி கடந்த 1921ம் ஆண்டு மிஷ வரிகளால் துவங்கப்பட்டு தென் திருவிதாங்கூர் மன் வர் காலத்தில் அரசுடைமை ஆக்கப்பட்டது.
சுமார் 103 ஆண்டு களாக கல்வி அறிவை ஆயி ரக்கணக்கான மக்களுக்கு தந்து வரும் பழமை வாய்ந்த இப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற் றது. தலைமை ஆசிரியர் அமுதா கொடியேற்றி வைத் தார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பாட்டு மற்றும் பேச்சு போட்டிகள் மற்றும் முன்னாள் மாண வர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மாலையில் நடைபெற்ற ஆண்டுவிழாவிற்கு வட்டார சுல்வி அலுவலர் சுப் பையா தலைமை வகித்தார். மார்த்தாண்டம் மருத்துவர் ஐசக் எலும்பு முறிவு மருத் துவமனை சார்பில் அன்ப விப்பாக கட்டி தரப்பட்ட சிறுவர் பூங்காவைத் திறந்து வைத்தார்.
பள்ளியின் ஆசிரியர் ஆதிராவரவேற்றார்.கவிஞர்
அரசு தொடக்கப் பள்ளி
குமரி ஆதவன் சிறப்புவிருந் தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பேசினார். வட்டார ஆசிரியர்பயிற்றுநர் ஷப்னா, மாத்தார் பார்மசி கல்லூரி செயலர் ஜெய சந்திரன், நாகர்கோவில் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் ககிர்தா பஸ்மத், முன்னாள் ஆங்கில ஆசி ரியர் செல்வசிங், பத்மநா பபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை மருத்துவர் கஜின் ஹெர்பர்ட், திருவட்டார் காங்கிரஸ் வட்டார தலை வர் வினுப்ராய், பேச்சிப் பாறை அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் நாகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் டேயிட்லீஜ், லாசர்,சார்லஸ், ஹெரால்டு வில்சன், ஜெயக்குமார், சிம்சோன், அஜின் ஷெர்லி, வல்சலம், பால்மணி, ஏஞ்சல், ஸ்ரீ வித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அஜின் சுஜிதா
நன்றி கூறினார். மாணவர் களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற கடந்த சில ஆண்டுகள தொடர்ந்து மாணவர் எண் ணிக்கை குறைந்து வந்ததால் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளியை முன் வேற்ற தீர்மானித்தனர். அதன் ஒரு பகுதியாக பள் ளியில் சேர்ந்த 20 மாணவர்
களுக்கு முன்னாள் மாணவர் கள் சார்பில் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
Monday, March 16, 2026
அரசு பள்ளியில் முப்பெரும் விழா - 24 மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.