பள்ளி, கல்லூரி தேர்வுகள் தொடக்கம்: தடையில்லா மின்சாரம் விநியோகிக்க உத்தரவு Start of school, college exams: Uninterrupted power supply ordered
தமிழகத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு கள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறி வுறுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சார வாரி யம் மாநிலம் முழுவதும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண் டுள்ளது.
அவசரகாலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில், கல்லூரிக ளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளது. மின்சார துறை முக்கிய அறிவிப்பு: மின் தொடர்பான புகார்
களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக் குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும்.
மின்சார வயர்கள் தொடர்பான பிரச்னையை 5 மணி நேரத்துக் குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள், டிரான்ஸ்பார்ம் பிரச் னைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரி தெரிவித்தனர். பொதுத்தேர்வு - பராமரிப்பு பணிக்கு மின் வாரியம் தடை
பள்ளிகளில் பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், தற்காலிக மின்தடை செய்வதை தவிர்க்க, துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்கு, மின் வாரியம் தடை விதித்து உள்ளது.துணைமின் நிலையம், மின் சாதனங்களில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணி நடக்கும் இடங்களில், காலை முதல் மாலை வரை மின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.தற்போது, பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால், தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதை உறுதி செய்ய, அடுத்த மாதம் வரை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக் கூடாது என, பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அவசியம் இருக்கும் பட்சத்தில், உயரதிகாரிகளிடம் உரிய ஒப்புதல் பெற்று, அந்த பணிகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.