ரூ. 30,000 வரை சம்பளம்... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... நாளையே (08.11.2023) கடைசி தேதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 07, 2023

Comments:0

ரூ. 30,000 வரை சம்பளம்... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... நாளையே (08.11.2023) கடைசி தேதி



ரூ. 30,000 வரை சம்பளம்... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... நாளையே கடைசி தேதி.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காலியிடங்கள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளை அலுவலக நேரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: மைய நிர்வாகி (Centre Administrator) (காலிப்பணியிடம் -1 )

தொகுப்பூதியம்: ரூ. 30,000/-

சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master’s Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.

வயது வரம்பு: 23 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. முதன்மை ஆல்சோசகர் பணியிடம் : 1 (Senior counsellor)

மாத ஊதியம் ரூ.20,000/ஆகும்.

கல்வித் தகுதி: சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MSW (Counselling Psychology)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் உளவியல் ஆலோசகராக குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.

3.வழக்குப் பணியாளர் அலுவலர்கள் (காலிப்பணியிடங்கள் - 6)

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் உளவியல் ஆலோசகராக குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப் படும் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000 ஆகும்.

4.பாதுகாப்பாளர் (Security Guard) (காலிப்பணியிடங்கள் 2):

குறைந்தது 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ; அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்; மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

விண்ணப்பதாரர் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கு வாகனம் ஓட்டத் தெரிந்து விண்ணப்பதாரர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.

5. பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் 1)

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

6.தொழில்நுட்ப வல்லுநர்பணியிடம்: 1 (IT-Admin)

மாத தொகுப்பூதியம் : ரூ.18,000/-

கல்வித் தகுதி : B.Sc., B.E., (Computer science)

கணிணி சார்ந்த பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் / முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவம் :

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்; 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்யஇந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை 08.11.2023 அன்றைய தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews