பல்கலையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு - கடைசி தேதி - 07.10.23 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 28, 2023

Comments:0

பல்கலையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு - கடைசி தேதி - 07.10.23



பல்கலையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி பல்கலையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.உடற்கல்வி இயக்குனர், சிஸ்டம் மேலாளர், வேலைவாய்ப்பு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், தணிக்கை அலுவலர், தோட்டக்கலை நிபுணர் ஆகிய தலா ஒரு பதவியும், மருத்துவ அதிகாரி-2, டேட்டா என்டரி ஆபரேட்டர்- 5, டிரைவர்- 14, எம்.டி.எஸ் ஊழியர்கள் -49 உட்பட மொத்தம் 109 பணிகள் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ளன.சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இந்த காலி பணியிடங்கள் குறித்த விபரம் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வருகிற 7-ம் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை https://www.pondiuni.edu.in/ இணையதளத்தில் பார்வையிடலாம் என பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews