பயிற்சி புத்தகம் வாங்க
திண்டாடும் தலைமை ஆசிரியர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி புத்தகம் வாங்க தலைமை ஆசிரியர்கள் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாணவர் கையேடு 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதல் பருவத் திற்கான கையேடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு என வட்டார வள மையங்களில் வந்து இறங்குகிறது.
இவற்றை அந்தந்த பள்ளிகளில் கொண்டு சேர்க்க வேண்டும் என தொடக்க கல்விஇயக்குனர் உத்தரவிட்டும், இதை நேரடியாக வந்து தலைமை ஆசிரியர்களே எடுத்தும் செல்லும் அவலம் தொடர்கிறது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகுப்புக்கு வருவதால், பற்றாக்குறைக்கு ஏற்ப வழங்கப்படுவதால் அடிக்கடி வட்டா வள மையங்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அலைந்து திரியும் நிலை உள்ளது. சிலர் தங்கள் சொந்த காரில் ஏற்றி கொண்டு வருகின்றனர். சிலரோ ஆட்டோ பிடித்து ஏற்றி வருகின்றனர்.
சிலர் டூவீலரில் அதிக புத்தகங்களை வைத்து ஆபத்து பயணம் மேற்கொள்ளும் அபாயமும் உள்ளது. தலைமை ஆசிரியர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போல மாறி விட்டதாக வருத்தப்படுகின்றனர். வட்டார வள பயிற்றுனர்களை குறைந்தபட்சம் 5 முதல் 6 பள்ளிகளுக்கு என நிர்ணயித்து வேனில் ஏற்றி சென்று கூட வழங்கலாம். ஆனால் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இது போல் மாலை நேரங்களில் கரடுமுரடான பாதையில் கையேடு எடுக்க சென்று திருநெல்வேலியில் ஒரு தலைமை ஆசிரியர் விபத்தில் சிக்கி உள்ளார்.
மேலும் இன்று எடுக்கவில்லை என்றால் வேறு கிடையாது என அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர். இதனால் பதறி பதறி தலைமை ஆசிரியர்கள் ஓடும் நிலை உள்ளது. ஆகவே இதை முறைப்படுத்தி தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு படி கையேடுகளை நேரடியாக பள்ளிகளில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.