Breaking

Monday, July 10, 2023

பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

பி.எச்டி.,க்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி,ஜூலை 4- புதுச்சேரி பல்கலையில், பி.எச்டி., படிப்புக ளுக்கு விண்ணப்பிக்க, வரும் 10ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் 750க்கும் மேற்பட்ட பி.எச்டி., படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான சேர்க்கை நுழைவு தேர்வு அடிப் படையில் நடக்க உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல், 29ம் தேதி வரை 'ஆன்லைனில்' பெறப் பட்டது. மாணவர்களின் நலன் கருதி, விண்ணப் பிக்க காலக்கெடு வரும் 10ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.இந்த கல்வியாண்டில் ஹிந்தி, சுற்றுலா, ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளில் புதி தாக பி.எச்டி., படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.1000. மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்க ளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

மேலும் விபரம் வேண்டுவோர் https://www.pondiuni.edu.in/admissions-2023-24/ என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog