இன்று (06.06.2023) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜேக் மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 06, 2023

Comments:0

இன்று (06.06.2023) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜேக் மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (டிட்டோ ஜேக்) மாநில உயர்மட்டக்குழக் கூட்டம் இன்று (06.06.2003) முற்பால் சென்னையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளரும் மற்றும் டிட்டோ ஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சமயில் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செ.முத்துச்சாமி EXMA, தமிழக ஆசிரியன் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஆவின்சென்ட் பால்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிஸ பொதுச்செயலாளர் சமயில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயனர் இரா.தாஸ், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.சேகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் 1.5.முத்துராமசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலளர் ந.சண்முகநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் இல்.தியோடர் ராபின்சன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலார் கோ.காமராஜ். ISR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரி.ஜொநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மிழ்கண்டவாறு திளணங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வுப் பெற தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி பெறு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நிறிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ள நீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர், பட்டதணி ஆசிரியர் பதவி உயர்வுகள் பெறுவதற்கு தகுதித்தேர்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க வேண்டும் என்பதை வர்புறுத்தியும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலன் சார்ந்த, மாணவர்களின் நலன் சார்ந்த. கல்வி நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு மூன்று கட்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் ஏகமனதாக திமாணம் நிறைவேற்றப்பட்டது.

1. 12.06,2023ல் வட்டாரத்தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

2. 26.06.2023ல் மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

3. 14.07.20234

சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தி

முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews