இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 28, 2023

Comments:0

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை Admission to Intermediate Teacher Training Course

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை 5-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்தப்படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி முதல் 15ந்தேதி வரை https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews