Breaking

Wednesday, December 21, 2022

பள்ளிகள் நேரம் மாற்றியமைப்பு! எங்கு தெரியுமா?

பள்ளிகள் நேரம் மாற்றியமைப்பு! எங்கு தெரியுமா?

உத்தரப் பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் காஸியாபாத்தில் பள்ளிகள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பள்ளிகள் காலையில் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியாக மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், காஸியாபாத்திலும் பள்ளிகள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் காலை விடிந்த பின்னரும் பனியின் அடர்த்தி அதிகமாகவுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் நலன் கருதி, உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பள்ளிகள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நேர மாற்றம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு அறிவிப்பு வரும்வரை பள்ளிகள் இந்த நேரத்தைப் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.

பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கும் நேரம் காலை 10 மணியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது விபத்து உள்ளிட்டவை ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog