பட்டப் படிப்பு முடித்தவர்கள் வங்கி மற்றும் நிதித்துறைகளில் வேலை வாய்ப்பை பெறும் வகையிலான திறன் மேம்பாட்டு படிப்புகளை சென்னை ஐ.ஐ.டி. துவங்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமான ஐ.ஐ.டி. ப்ரவர்த்தக் பவுண்டேஷன் சார்பில் வங்கிகள் மற்றும் நிதித்துறை தொடர்பான பணிகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் புதிய திறன் மேம்பாட்டு படிப்புகளை நடத்துகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யின் முன் முயற்சி அமைப்பான டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி சென்னையில் நிதித்துறை சான்றளிக்கப்பட்ட முதன்மை பயிற்சியாளரான இன்பேக்ட்ப்ரோவுடன் இணைந்து இந்த படிப்புகளை வழங்குகின்றன.
இளநிலை பட்டம் பெற்றவர்கள் வங்கி நிதி மற்றும் காப்பீட்டு துறைகளில் திறமையை வெளிப்படுத்த ஆர்வம் இருந்தால் இந்த சான்றிதழ் படிப்புகளில் சேரலாம். இந்திய வங்கி துறைகள் பங்குச்சந்தை நிறுவனங்கள் நடத்தும் சான்றிதழ் தேர்வுகளிலும் பங்கேற்கலாம்.
இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை மற்றும் பாடத்திட்ட விபரங்களை https://skillsacademy.iitm.ac.in/ அல்லது https://iit.infactpro.com/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நிதித்துறை படிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கூறுகையில் ''இந்தியா 50 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை இலக்காக வைத்து விரைந்து செயல்பட்டு வருகிறது.
''இந்த இலக்கை அடைவதற்கு திறன் மேம்பாட்டு படிப்புகளை முதன்மையான கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குவதால் வங்கி மற்றும் நிதித்துறையில் பட்டதாரிகளுக்கான பணி வாய்ப்புகள் அதிகரிக்கும்'' என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.