பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க அமைச்சர் உத்தரவு
சென்னை : ''பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க வேண்டும்; புதிய பள்ளி கட்டடங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
பொதுப்பணித் துறையின் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டல தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்களுடன், தலைமை செயலகத்தில், அமைச்சர் வேலு நேற்று ஆலோசனை நடத்தினார். பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது:
பொதுப்பணித் துறையில் நிலுவையில் உள்ள கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை துவங்க உள்ளதால், பள்ளி, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டடங்களை ஆய்வு செய்து, மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடிக்க வேண்டிய பழைய பள்ளிக் கட்டடங்களை, விரைந்து இடிக்க வேண்டும்.
நபார்டு வங்கி நிதி உதவியுடன் கட்டடப்படும் அரசு பள்ளிகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை துவங்க உள்ளதால், மண்டல அளவில் கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். ஜப்பான் பன்னாட்டு வங்கி உதவியுடன் கட்டப்படும் ஏழு அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.