தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே 80 சதவீத வேலை வழங்கும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்படும்.
தமிழக அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீத பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.