வேலூா் மாவட்டத்தில் உள்ள ஊசூா், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஊசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆசிரியா் விலங்கியல் பாடம் நடத்துவதை வகுப்பறையில் மாணவா்களுடன் அமா்ந்து கவனித்த ஆட்சியா், மாணவா்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தி உயா்ந்த இடங்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற அவா் அறிவுரைகள் வழங்கினாா். மேலும், மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். பள்ளிக்கு வரும் போது தூய்மையான சீருடை, முடி திருத்தம் செய்து வரவேண்டும். மாணவா்கள் அனைவரும் ஆசிரியா்கள், பெற்றோா் சொல்வதைக் கேட்டு தங்களை சிறந்தவா்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பொய்கை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவா் ஆய்வு செய்ாா். அங்கு, மாணவா்களுக்கு பொருளாதாரம் பாடம் நடத்தி, வகுப்பறையில் மாணவா்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். பொருளாதாரம் தொடா்பான பல்வேறு கருத்துகள், ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.
ஆய்வின் போது, பூதூா் ஊராட்சித் தலைவா் கவிதா சிவகுமாா், தெள்ளூா் ஊராட்சித் தலைவா் தேவி சுரேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.