மதுரை மாவட்ட தனியார் தொழில் நிறுவனங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் இவர்களுக்கு போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே அங்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்என்பதில் அரசு அக்கறை காட்டுகிறது.மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இவர்களுக்கென தனியார் துறை வேலைவாய்ப்பு, சுய தொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆலோசனை மையம் செயல்படுகிறது.
இந்த அமைப்பு தனியார் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1:20 என்ற விகிதாச்சாரத்தில் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.மாதம் 3 முறை தனியார் தொழில் நிறுவனங்களை அழைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடத்தி பணிவாய்ப்பு வழங்க செய்கின்றனர். கடந்த 6 மாதங்களில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பணிவாய்ப்புஏற்படுத்தி கொடுத்துள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பதிவு அலுவலர் நரேஷ் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள்எத்தகைய பாதிப்புள்ளோராக இருந்தாலும், பதிவு செய்திருந்தால் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். ஏப்ரலில் மட்டும் 2 முகாம்கள் நடத்தி 42 பேருக்கு வாய்ப்பளித்துள்ளோம். மே மாதம் தனியார் நிறுவனங்களை அழைத்து பேச உள்ளோம். தொழிலாளர் நலத்துறை மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர உள்ளோம்.
'பிரைவேட் லிமிடெட்' என பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களில் இருபது பேருக்கு ஒருவர் மாற்றுத்திறனாளி என்றரீதியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதனை செயல்படுத்தகூறுவோம். வேலைவாய்ப்பு தொடர்பாக தனியார் நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகளும் பதிவுசெய்யலாம், என்றனர். தொடர்புக்கு:86103 26925.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.