தமிழ்நாடு வேளாண் பல்கலை கவுன்சலிங் துவங்கியது: சிறப்பு பிரிவில் 70 இடங்கள் நிரம்பின - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 25, 2022

Comments:0

தமிழ்நாடு வேளாண் பல்கலை கவுன்சலிங் துவங்கியது: சிறப்பு பிரிவில் 70 இடங்கள் நிரம்பின

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கு நடந்த கலந்தாய்வின் மூலம் 70 இடங்கள் நிரப்பப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது. இந்த கலந்தாய்வு வரும் மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க | பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும்?: உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி

விளையாட்டு பிரிவில் மொத்தம் உள்ள 20 இடங்களும் நிரம்பின. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 20 இடங்கள் இருந்தன. இதில், 40 பேர் பங்கேற்ற நிலையில், 20 பேருக்கு இடம் தரப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 78 இடங்களில் 30 இடங்கள் நிரப்பப்பட்டன. சிறப்பு பிரிவினர் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் மொத்தம் 70 இடங்கள் நிரம்பின.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews