ஊரக கண்டுபிடிப்பாளர் விருது: மார்ச் 7க்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 25, 2022

Comments:0

ஊரக கண்டுபிடிப்பாளர் விருது: மார்ச் 7க்குள் விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருது பெற விரும்புவோர் மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவியல் நகரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அறிவியல் நகரம் கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழக அரசின் ‘ஊரக கண்டுபிடிப்பாளர் விருது’ வழங்கி வருகிறது.

இதையும் படிக்க | 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை

விருது கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியில் கொண்டுவரும் வகையில் 2 சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மற்றும் சான்று வழங்கப்படுகிறது. இந்த விருது பெற விரும்புவோர், அறிவியல் நகரம் இணைய தளமான www.sciencecitychennai.in ல் தங்களுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் முன்மொழியப்பட்டு அறிவியல் நகரத்துக்கு மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews