Breaking

Sunday, November 07, 2021

புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று காலை 11 மணிக்கு ஏரியிலிருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்படுமென திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று காலை 11 மணிக்கு ஏரியிலிருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்படுமென திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் - புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரியிலிருலிந்து உபரி நீர் வெளியேற்றுதல் - முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுதல் தொடர்பாக.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. எரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (07.11.2021) நீர் இருப்பு 19.30 அடியாகவும் கொள்ளளவு 2872 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. புழல் ஏரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 1487 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் புழல் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர் மட்ட உயரம் 19.30 அடியாக உள்ளது. எனவே, அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை (Compendium Rules) வழிகாட்டுதலின்படி எரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை. நடவடிக்கையாக ஏரியிலிருந்து இன்று 07:11.2021 பிற்பகல் 11.00 மணி அளவில் விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

காலவே எரியிலிருந்து மிகை வெளியேறும் வாய்லிகால் செல்லும் d கிராமங்களான நாரவாரிக்குப்பம். தண்டங்கழனி, வடகரை, கிராண்ட்லைன். புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்துர் கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் chron தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற எடுக்குமாறும் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog