Breaking

Monday, November 08, 2021

நவ. 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் வினாடி வினா போட்டி

மதுரை காந்தி மியூசியம் வளாக அரசு அருங்காட்சியகம் சார்பில் 75 ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 9 முதல் 12 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் வினாடி வினா போட்டி நவ., 10 நடக்கிறது. காப்பாட்சியர் மருது பாண்டியன் கூறியதாவது: போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பெயரை நவ., 7க்குள் 86107 90266 என்ற அலைபேசி எண்ணில் குறுந்தகவல், வாட்ஸ்அப் அனுப்பலாம். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 4 மாணவர்கள் பங்கேற்கலாம்.

இந்திய விடுதலை போராட்டம், சுதந்திர போராட்டத்தில் தமிழகம், மதுரை சுதந்திர போராட்ட தியாகிகள் சார்ந்த கேள்விகள் இடம் பெறும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் சுதந்திர போராட்டம் குறித்த 20 கொள்குறி வினாக்கள் கேட்கப்பட்டு அதிக வினாக்களுக்கு பதிலளிக்கும் முதல் 8 பள்ளிகளைதேர்வு செய்து இறுதிபோட்டி நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog