"தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நவ. 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி (நவம்பா் 14) பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி நவம்பா் 12 ஆம் தேதி பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முறையே மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3- ஆம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரைத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பள்ளி மாணவா்களுக்கு காலை 9 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 1 மணிக்கும் போட்டி நடைபெறும்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.