10, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டு மாற்றமில்லை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 23, 2021

Comments:0

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டு மாற்றமில்லை!

''பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; தேர்வு தள்ளிப் போகாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கிடையில், கல்லுாரிகளில் வாரத்தில் ஆறு நாட்களும் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டியதுகட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. வாரத்தின் ஆறு நாட்களும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வித் துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா; தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் இருந்தது. 'இல்லம் தேடி கல்வி திட்டம்'

இந்நிலையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதால், திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று அறிவித்தார்.சென்னையில் சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர் கூறியதாவது:அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தனியார் 'ஸ்பான்சர்'கள் வழியாகவும் பள்ளிகளின் வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. ஸ்பான்சர் நிறுவனங்களை பெயர் பலகையில் குறிப்பிடுவது குறித்தும், சட்டரீதியான ஆலோசனை நடத்தி வருகிறோம். மாணவர்களுக்கான கற்பித்தல் இடைவெளியை சரி செய்ய, 'இல்லம் தேடி கல்வி திட்டம்' அறிமுகம் செய்துள்ளோம். இந்த திட்டத்துக்கான தன்னார்வலர்களை இறுதி செய்யும் பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் தன்னார்வலர்களின் கற்பித்தல் பணி துவங்கும். பள்ளிகளை செப்டம்பரில் தான் திறந்துள்ளோம். எனவே, ஆறு மாதங்களுக்குள் தேர்வுகள் என்றால், மாணவர்கள் அச்சம் அடைந்து விடுவர் என்பதால், அவர்களுக்கான பாடச்சுமையை 35 முதல், 55 சதவீதம் வரை குறைத்துள்ளோம். எனவே, கூடுதல் சுமையில்லாமல் தேர்வுகள் நடத்தப்படும். பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்; தள்ளிப்போக வாய்ப்பில்லை. மாணவர்களின் சான்றிதழ்களில் பயிற்று மொழியும் குறிப்பிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

திருத்தப்பட்ட அரசாணை

இதற்கிடையில், 'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் சனிக்கிழமை உட்பட, ஆறு நாட்களும் நேரடி வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும்' என, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் நேற்று அரசாணை பிறப்பித்து உள்ளார். திருத்தப்பட்ட அரசாணையுடன், கல்லுாரி முதல்வர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:

* உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்லுாரிகள், நேரடி முறையில் சனிக்கிழமை உட்பட வாரத்தின் ஆறு நாட்களும் பாடம் நடத்த வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டிருந்த 'செமஸ்டர்' தேர்வுகளை, அடுத்த ஆண்டு ஜன., 20க்கு பின் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடர்பான மாதிரி தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்

* 'ஆன்லைன்' முறையில் பாடங்கள் முடிக்கப்பட்டிருந்தால், மாணவர்களுக்கு புரியும் வகையில் நேரடியாக திருப்புதல் வகுப்புகள் நடத்த வேண்டும். தேர்வுக்கு தயாராகும் வகையில், மாணவர்களுக்கு தேவையான பாடக் குறிப்புகளை வழங்க வேண்டும் * அனைத்து பல்கலைகளின் பதிவாளர்களும், நிகர்நிலை பல்கலைகளும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளும் இந்த உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை, மாவட்ட கலெக்டர்களும், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லுாரி கல்வி இயக்குனர் ஆகியோரும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இன்ஜினியரிங், கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வுக்கு பதில், டிசம்பரில் நேரடி தேர்வு நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை ஏற்கனவே அறிவித்தது. இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின், மாணவர் சங்க பிரதிநிதிகளிடம், உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் கடந்த வாரம் பேச்சு நடத்தினர். அதில், நேரடி செமஸ்டர் தேர்வுகளை டிசம்பருக்கு பதில், ஜனவரி 20க்கு பின் நடத்தவும், அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்கவும் உடன்பாடானது. இதை அமல்படுத்தும் விதமாக, உயர் கல்வி செயலர் நேற்று புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews