அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு, 5 பள்ளி மாணவர் விடுதிகள், 3 பள்ளி மாணவிகள் விடுதிகள், 3 கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர் விடுதிகள், 3 கல்லூரி பாலிடெக்னிக் மாணவி விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் சேரலாம்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். விடுதிகளில் சேர்வதற்கு, பெற்றோர் (அ) பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிமீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்து இலவசமாக பெற்று பூர்த்தி செய்து, வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Tuesday, November 23, 2021
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
Colleges
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.