1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள்: பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? - தொடக்க கல்வி இயக்ககம் சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 09, 2021

Comments:0

1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள்: பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? - தொடக்க கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில், வருகிற 1-ந் தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. அந்தவகையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடக்க கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருக்கும் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கேற்றவாறு முக கவசம் இருப்பதையும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.

* மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வகுப்பறைகளில் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு ஏற்றவாறு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி

* அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலுக்கு ஏற்ப வேலைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

* இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம், குறைக்கப்பட்ட பாடங்கள் மற்றும் அடிப்படை பாடங்களுக்கு மாணவர்களை தயார் செய்தல் வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு ஆவார்கள்.

* நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணுகுவதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.

* வாய்மொழி பயிற்சி, எழுத்து பயிற்சி, கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews