நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13-ல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான 'நீட்' செப். 12-ம் தேதி நடைபெறும் என கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றி 'நீட்' தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'நீட் ' தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று (செப்.11) கூறியது,
நடப்பு கூட்டத்தொடர் செப்.13ல் நிறைவடைய உள்ளது. அப்போது நடக்க உள்ள கூட்டத் தொடரில் 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்
Search This Blog
Saturday, September 11, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.