நெட்வொர்க்' சரியாக கிடைப்பதில்லை என்பதால், 'யு டியூப்' வாயிலாக, பள்ளி பாடங்களை நடத்த, ஒடிசா அரசு முடிவு செய்து உள்ளது.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமை யிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரி வகுப்புகள், 'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, தொற்று பரவல் குறைந்த தால், 9 - 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால், மூன்றாவது அலை பரவும் என்ற அச்சத்தால், பள்ளிகளுக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை குறைவாக வே உள்ளது. அதனால், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆனால், ஒடிசாவில் பல மாவட்டங்களில், 'நெட்வொர்க்' பிரச்னை உள்ளது. 'சிக்னல்' சரியாக கிடைக்காததால், மாணவர்களுக்கு ஆன்லைனில் படிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னையால் ரயாகடா மாவட்டம், பண்டரகுடா கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கடந்த 17ம் தேதி, மொபைல் போனுடன் அருகில் இருந்த மலை உச்சிக்கு சென்றார்.அங்கு சிக்னல் கிடைத்ததால், மொபைலில் பாடங்களை கவனித்து வந்தார்.
அப்போது, அவர் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து இறந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, ஒடிசா மாநில கல்வித்துறை, யு டியூப் சேனல் வழியாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. 'ஆசிரியர்கள் பாடங்களை, வீடியோவில் பதிவு செய்து, யு டியூப் சேனலில் வெளியிடுவார்.'மாணவர்கள் தங்கள் மொபைல் போனில் சிக்னல் கிடைக்கும் போது, யு டியூப் சேனல் வாயிலாக பாடங்களை கற்க முடியும்' என, மாநில கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.