தமிழகத்தில் கடந்த வாரங்களில் காவலர் தேர்வுக்கான உடல்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெற்றது. இதில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி தர்மபுரியை சேர்ந்த இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
கடந்த 2009 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்பட்டதாக கூறி இளம்பெண் ஒருவர் அலுவலக கட்டிடத்துக்கு மேல் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது தர்மபுரி மாவட்டம் பென்னகரம் பகுதியில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன், இவரது மனைவி மோகனா. இவர் இன்று (ஆகஸ்ட் 23) காலை 11 மணியளவில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அலுவலகத்தின் மாடிக்கு சென்ற இவர் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மீட்டு அழைத்து வந்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது, ‘எனது கணவர் கடந்த 2008-09 ல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் கலந்து கொண்டு, அதில் தேர்ச்சி பெற்றார். அடுத்து நடைபெற்ற உடல் தகுதி தேர்விலும் அவர் கலந்து கொண்டார். தேர்வில் நன்றாக செயல்பட்ட அவருக்கு கட் ஆப் மதிப்பெண்களில் முடிவு வரவில்லை. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தேர்வு எழுதிய OMR தாளை கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழுவுக்கு மனு அனுப்பினார். ஆனால் முறையான பதில்கள் கிடைக்காத நிலையில், அவர் மீது RDI விசாரணை நடத்தப்பட்டது.
இதனால் பல ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள எனது கணவருக்கு பதிலாக நான் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். அதனால் 2008-09 ஆண்டுக்கான தேர்வு பட்டியலை எடுத்து மீண்டும் சரி பார்க்க வேண்டும். அதன் மூலம் எனது கணவருக்கு பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.